மோதல் ஆரம்பம்!!!வைகோவின் சேனாதிபதி நான்... அவரது முகம் பதித்த மோதிரமே... எனது அடையாளம்! - மல்லை சத்யா
Vaikos commander ring with his face my identity Mallai Sathya
ம.தி.மு.க.வில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவின் ஆதரவாளர்களுக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இந்நிலையில், கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று, ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகக்குழு கூட்டம் கூடவுள்ளது. இந்தப்பிரச்சனை நடுவே, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் 'மல்லை சத்யா' பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
மல்லை சத்யா:
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,"ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான்.ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதை போல் வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம்.
வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இதுவே என் அடையாளம்" என்று தெரிவித்துள்ளார்.மேலும் மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை 'துரை வைகோ' துறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், இந்த பதிவை மல்லை சத்யா வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி, இன்று துரை வைகோ மற்றும் மல்லை சத்யா விவகாரம் குறித்து உரையாட அவசரமாக ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Vaikos commander ring with his face my identity Mallai Sathya