'எருமை மாட்டு பொங்கல்' வாழ்த்துக்கள்.! எம்எல்ஏ.,வின் சர்ச்சை வாழ்த்து.!
vck mla pongal wish
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். கடந்த 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் பொங்கல் வைத்து உழவுக்கு துணை நிற்கும் சூரியபகவானுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தங்களுடைய விவசாய நிலங்களுக்கு உதவி செய்யக்கூடிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும் மாட்டு பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டன.
இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் (விடுதலை விடுதலை சிறுத்தை கட்சி) மாட்டுப்பொங்கல் தின வாழ்த்தை சற்று வித்தியாசமாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பசு மாட்டையோ அல்லது காளை மாட்டையோ காண்பித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வம் மட்டும் எரும மாடு புகைப்படத்துடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை அருகே வைத்து, எருமை மாட்டு பொங்கல் வாழ்த்து தின வாழ்த்து தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மேலும், இவரின் இந்த வாழ்த்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பல கட்சியினர் விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.