ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் - திருமாவளவன், கார்த்தி சிதம்பரம் கண்டனம்.!  - Seithipunal
Seithipunal


ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசியது ஏற்புடையது அல்ல என்று, அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். 

இதேபோல், மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநர் வரும்போது கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்வது ஜனநாயகமே. ஆனால், ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் அதனை கண்டிக்கிறேன் என்று, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், "ஆளுநர் சட்டப்பூர்வமான தனது கடமையை செய்யவில்லை என்றால், அவர் எங்கு சென்றாலும் கருப்பு கொடி காண்பிப்பதும், எதிர்ப்பை தெரிவிப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன செய்திக்குறிப்பில், "மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறிய ஆளும் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது.

ஜனநாயக முறையில்  எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவது தவறானது. வன்முறை சமூக அமைதியைத்தான் சீர்குலைக்குமே தவிர எதற்கும் தீர்வாக அமையாது.

எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இனி இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பாகும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK  Thirumavalavan RNRavi 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->