புதிய கூட்டணிக்கு தயாரான திருமா! காலையிலேயே திமுகவை பதறவைத்த தகவல்!
VCK Thirumavalavan TVK Vijay DMK MK Stalin
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவன் மற்றும் விஜய் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில், "ஆட்சியிலும் - அதிகாரத்திலும் பங்கு" எனும் முழக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியதற்கு, திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர், விடுதலை சிறுத்தைகள் அமைதியாக அந்த முழக்கத்திலிருந்து பின்வாங்கி இணக்கமாகினர்.
இதற்கிடையில், கடந்த மாதம் விஜய் தொடங்கிய "தமிழக வெற்றிக் கழகத்தின்" முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், தங்களின் அரசியல் எதிரிகளாக பாஜக மற்றும் திமுகவை அறிவித்து, 2026 சட்டமன்ற தேர்தலில் தங்களை நம்பி கூட்டணியில் இணைவோருக்கு ஆட்சியிலும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று கூறினார்.
இந்த அறிவிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நேரடியாக கூட்டணிக்கு அழைக்கும் வகையிலானதாக கருதப்பட்டது, மேலும், திரை மறைவில் செய்ய வேண்டியதை பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கக் கூடாது என்று சூசகமாக விஜயின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு கொடுத்திருந்தார் திருமாவளவன்.
இதுபோன்ற சூழலில், வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ள அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட, அதனை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும், இருவரும் ஒரே மேடையில் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திமுகவிற்கு இது பெரும் அதிர்ச்சியான தகவலாக அமைந்துள்ளது.
என்னதான் திருமாவளவன், திமுக கூட்டணியில் இருப்பதாக அறிவித்திருந்தாலும், கூட்டணி மாறுவதும், புதிய கூட்டணியை அமைப்பதும் அவருக்கு புதியதல்ல. எனவே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கவே அத்தனையையும் நிகழ்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
VCK Thirumavalavan TVK Vijay DMK MK Stalin