மக்களே உஷார்!....இந்த 20 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை!
People beware these 20 districts are going to be washed by rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த மாதம் 2வது வாரத்தில் தீவிரமடைய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாருர், அரியலூர் தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்று 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
English Summary
People beware these 20 districts are going to be washed by rain