ஆட்சி அதிகாரத்தில் பங்கு!...விஜய்யை வெளுத்து வாங்கிய பாஜக!
Share in the ruling power bjp who whitewashed vijay
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தனது குடும்பத்தினருடன் சாமி செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்ற நிலைப்பாடு பா.ஜ.க கட்சி முன்பிருந்தே செயல்படுத்தி வருவதாகவும், கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இருந்தபோதும் கூட்டணி அரசியலில் கூட்டணி கட்சிகளை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்துள்ளதாக கூறினார்.
மேலும், யாருடன் சென்று ஓட்டுகேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறிய அவர், தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினருக்கு சீட்டு வழங்கி அமைச்சரவையில் இடம் அளிப்பது குறித்து பிரதமர் மோடி தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் பிரகாசித்து விட்டு அரசியலில் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு என்றும், இதனை மக்கள் பல முறை உணர்த்தி உள்ளதாக கூறினார்.
English Summary
Share in the ruling power bjp who whitewashed vijay