அதிமுக ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு நிரந்தரமாக திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்பெற்றுள்ளது.

இது குறித்து, கடந்த அதிமுக ஆட்சியின்போது வழங்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ், துறையின் முதன்மை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றளவை குறைக்கும் முடிவு திரும்ப பெறப்படுவதாக காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் முதன்மை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தேசிய வன உயிர் வாரியத்திடம் தமிழக அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. அந்த விண்ணப்பத்தில், "கட்டுமானங்களை கட்ட முடியாத காரணத்தால் உள்ளூர் மக்களை, பறவைகள் சரணாலயம் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணியில் ஈடுபடுத்த முடியவில்லை.

ஏரியை சுற்றி முதல் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே தற்போது விவசாயம் நடந்து வருகிறது. 3 முதல் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் விவசாயம் கைவிடப்பட்டு உள்ளதால், பறவைகள் வருவதில்லை என்றும், அப்பகுதியில் கட்டுமானங்களை எழுப்பும்போதும், நில பயன்பாட்டை மாற்றும் போதும் கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்சனைகள் எழுகிறது.

இதனை தடுக்க வேடந்தாங்கல் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோ மீட்டரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இத்தகைய முன்மொழிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றளவை குறைக்க சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு நிரந்தரமாக திரும்பப் பெறப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vedanthankal land issue tn govt letter


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->