#விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டி இல்லையா? சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ செய்தி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

திட்டமிட்டபடி விஜய் மக்கள் இயக்கம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தேர்தலில் போட்டி இல்லை என்ற போலியான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் புஸ்ஸி ஆனந்த் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். 

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள்தான் இறுதி செய்வார்கள் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaimakkaliyakkam election 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->