''விஜய் முஸ்லிம் விரோதி' சமூக விரோத சக்திகளை இப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாதது; அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர்..!
Vijay is anti Muslim inviting anti social elements to Iftar parties is impermissible All India Muslim Jamaat Leader
''தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முஸ்லிம் விரோதி'' என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைமை முப்தியுமான மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி குறிப்பிட்டுள்ளார்.
விஜய் குறித்து பத்வா எனும் நோட்டீசை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; "விஜய் முஸ்லிம் விரோதி.. அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன.

மது அருந்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளை இப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாதது மற்றும் பாவம் என்று இஸ்லாமிய சட்ட விதிகள் கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அத்தகைய நபர்களை நம்ப வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானவர்களை நிகழ்வுகளுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். திரைப்படத் துறையில் ஒரு தொழிலுக்குப் பிறகு அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Vijay is anti Muslim inviting anti social elements to Iftar parties is impermissible All India Muslim Jamaat Leader