விஜய் குழப்பத்தில் இருக்கிறார்!...பேச்சில் தெளிவு இல்லை - எல்.முருகன் கடும் விமர்சனம்!
Vijay is confused there is no clarity in the speech l murugan criticizes
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விமர்சித்திருந்தார்.
மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரண்டு கண்கள் என்று பேசினார்.
இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், விஜய் குழப்ப நிலையில் இருப்பதாகவும், அவரது பேச்சில் தெளிவு இல்லை என்று கூறினார்.
தேசியத்தை குழப்பமாக கையாண்டு இருப்பதாக கூறிய அவர், இருமொழிக் கொள்கை என்று கூறியுள்ளார். இவ்வாறு சில விஷயங்கள் முரண்பட்டதாக உள்ளது என்றும், இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என்று விமர்சித்தார்.
இருந்த போதிலும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், தி.மு.க போலி திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறது, இதன் காரணமாக தான் குடும்ப அரசியல் குறித்து விஜய் பேசியுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
Vijay is confused there is no clarity in the speech l murugan criticizes