மத்திய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் விடுத்த அவசர கோரிக்கை!
Vijayakant sat about Rubber estate workers protest
ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்கு 40 ரூபாய் ஊதிய உயர்வு ஒப்புக் கொள்ளப்பட்டது.
ஆனால் ரப்பர் கழகம் ஊதியம் தர மறுத்ததால் கடந்த 7-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களுடன் அரசு சார்பில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றி அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும்.
தே.மு.தி.க எப்போதும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்கும்" என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
English Summary
Vijayakant sat about Rubber estate workers protest