தமிழக பட்ஜெட் : தமிழக மக்களை ஏமாற்றும் செயல் - விஜயகாந்த்.!
VIJAYAKANT SAY ABOUT TN BUDGET 2022
தமிழக சட்டசபை (2022-2023) பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாள் 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இரண்டாவது நாள் 2022-2023-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது
இந்நிலையில், தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரின் அந்த செய்தியில், "பல லட்சம் கோடி கடனில் தமிழகம் மூழ்கியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல், மேலும் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி இருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
மொத்தத்தில் தமிழக பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த அறிவிப்பாக உள்ளது. வாக்குறுதிகள், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு குறித்தும் அறிவிப்பு எதுவும் இல்லை" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
English Summary
VIJAYAKANT SAY ABOUT TN BUDGET 2022