#BreakingNews: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!
vijayakanth returns home from hospital
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அண்மையில் கால் விரல்கள் அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நலனை பலரும் விசாரித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நலம் விசாரித்தார்.
ஏற்கெனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விஜயகாந்த் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
English Summary
vijayakanth returns home from hospital