தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு! விழுப்புரம் எஸ்.பி,யிடம் பாதுகாப்பு கோரி மனு!
Villupuram TVK Vijay Meeting
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து கொடியை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கட்சியின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகளையும், பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வைத்த வருகின்றனர்.
கட்சியின் கொடியில் யானை, வாகை மலர், நட்சத்திரம் உள்ளிட்டவைகளுக்கு பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதாகவும், அதனை கட்சியின் முதல் மாநாட்டில் தெரிவிப்பதாவும் விஜய் தெரிவித்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதமே அரசியல் கட்சியை விஜய் தொடக்கி இருந்தாலும், அவரின் கடைசி இரு படங்கள் வெளியான பின்பு தான் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவார் என்று சொல்லப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் முதல் மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாநாடு விக்ரவாண்டியில் நடப்பது உறுதியாகியுள்ளது. மாநாட்டின் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Villupuram TVK Vijay Meeting