ஈரோடு வெங்கட்ட ராமசாமியின் சிலை கூண்டோடு தகர்ப்பு.! போலீசார் குவிப்பு.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே, நேற்று இரவு கண்டெய்னர் லாரி மோதியதில் ஈரோடு வெங்கட்ட ராமசாமியின் சிலை கூண்டோடு தகர்க்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் காமராஜர் வீதியில் கூண்டுகள் அமைக்கப்பட்டு ஈவெ ராமசாமியின் சிலை ஒன்று அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த சிலையின் அருகே வந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக சிலையின் மீது மோதியது.

இதனால் அந்த சிலை கூண்டோடு கீழே விழுந்து முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரசியல் கட்சியினர் சம்பவ இடத்தில ஒன்றுகூடினர். மேலும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி மற்றும் விழுப்புரம் மாவட்ட கோட்டாட்சியர் அரிதாஸ் நேரில் வந்து பார்வையிட்டனர்.

இதற்கிடையே, திமுகவை சேர்ந்த பிரமுகர்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சிலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஈரோடு வெங்கட்ட ராமசாமியின் சிலை சேதப்படுத்தப்பட்டு சம்பந்தமாக லாரி ஒன்றை சிறை பிடித்துள்ள போலீசார், அந்த லாரியின் ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VILUPURAM EVT STATUE Damaged


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->