"காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் வினேஷ் போகத்?".....அரசியல் கட்சியில் சலசலப்பு!
Vinesh Phogat will field as a Congress candidate Commotion in the political party
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இதில்
பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் கைவிரித்துவிட்ட நிலையில்,வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரியானா தேர்தலில் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்தனர். பின்னர் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலை அவரது இல்லத்தில் சந்திந்தனர். இவர்களுடைய சந்திப்பு அரசியல் கட்சிகள் இடையே பேசு பொருளாகியுள்ளது.
English Summary
Vinesh Phogat will field as a Congress candidate Commotion in the political party