தேர்தல் முடிவுகள் : தர்மபுரியில் பாமக சௌமியா அன்புமணி முன்னிலை!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாமகவின் நட்சத்திர வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலையில் பாட்டாளி மக்கள் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பத்து தொகுதிகள் பெற்றது. காஞ்சிபுரம், தர்மபுரி, மயிலாடுதுறை, சேலம், அரக்கோணம், ஆரணி,விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் என பத்து நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

 அதில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமக நிர்வாகி அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பாமக தலைமை தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளரை மாற்றியது. தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மனைவி பசுமைத் தாயகத்தின் தலைவர்  முனைவர் சௌமியா அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில்,  இந்தியா முழுவதும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆண்டவர் கையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்த சுற்று வாக்கு எண்ணிக்கை படி பாமக நட்சத்திர வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தி பாமக தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote counting Dharmapuri Pmk first


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->