11-வது புரோ கபடி லீக்!...இன்று ஐதராபாத்தில் கோலாகல தொடக்கம்! - Seithipunal
Seithipunal


11-வது புரோ கபடி லீக் போட்டி கோலாகலமாக இன்று  ஐதராபாத்தில்  தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்ததாக உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நவம்பர் 10 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும், பின்னர்  மகாராஷ்டிரா மாநிலம் புனேயில்  டிசம்பர் 3-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும், இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், முன்னாள் சாம்பியன்கள் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து போட்டி போட உள்ளது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற உள்ளது.

தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில்  தெலுங்கு டைட்டன்ஸ்,  பெங்களூரு புல்சை எதிர்கொள்கிறது. மேலும் இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து இன்று  2-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, யு மும்பாவை இரவு 9 மணிக்கு சந்திக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The 11th pro kabaddi league starts with a bang today in hyderabad


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->