#BigBreaking || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, கள்ள ஓட்டை தடுக்கும் மசோதா நிறைவேற்றம்.! - Seithipunal
Seithipunal


தேர்தலில் வெவ்வேறு இடங்களில் ஒரே நபர் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க வகை செய்யும் தோ்தல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியுள்ளது.

இன்று மக்களவை கூடியதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வழி வகை செய்யும் சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு சட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியபோது,

"தேர்தலில் வாக்களிக்கும் போது நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்பட்டு, நாட்டில் நியாயமான ஒரு தேர்தல் நடப்பது இந்த சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

அப்போது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன. மேலும், இந்த மசோதா இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டினர். 

உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து பிறப்பித்த உத்தரவை மீறி இந்த சட்டத்திருத்தம் அமைந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி மற்றும் கூச்சல் குழப்பத்தில் இடையே, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா திருத்தம் சற்று முன்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

voter id and aadhar number link bill


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->