பரபரப்பில் விக்கிரவாண்டி! நாளை வாக்கு எண்ணிக்கை! மூன்றடுக்கு பாதுகாப்பு!
Votes counted in Vikravandi by election will be counted tomorrow
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி, திமுக சார்பில் அன்னியூர் சிவா உட்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிட்டுள்ளனர்.
276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 82.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்கு பதிவு எந்திரங்கள் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு அறையில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. முகவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் பூட்டி சீல் வைத்தார்.
அதன் தொடர்ந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை காலை 7.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவுகள் ஒளிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணும்மையத்தை சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Votes counted in Vikravandi by election will be counted tomorrow