128 எம்.பி.க்கள் ஆதரவுடன், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா..! - Seithipunal
Seithipunal


வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் இன்று ராஜ்யசபாவில் நீண்ட விவாதம் நடைபெற்றது. இதன் பின் நடந்தவாக்கெடுப்பில் 128 உறுப்பினர்களில் ஆதரவுடன் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று முன்தினம் (ஏப்ரல்- 02 ) பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இந்த திருத்த சட்டத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், மசோதா தாக்கல் ஆனபோது அரசு தரப்பும் மற்றும் எதிர்க்கட்சி எம்பி.,க்களும் இடையே காரசாரமாக விவாதம் இடம்பெற்றது.

லோக்சபாவில், 12 மணி நேர விவாதத்துக்கு பின், வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பு, நள்ளிரவு 1:00 மணி அளவில் நடைபெற்றது. இறுதியில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, குரல் ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது, மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். எதிராக 232 பேர் ஓட்டளித்தனர். இதையடுத்து மசோதா லோக்சபாவில்திருத்த மசோதா நிறைவேறியது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 03) ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை பாராளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா குறித்து 13 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்றது. இன்று நள்ளிரவு 02 மணியளவில் விவாதம் நிறைவடைந்து, பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்தநிலையில், ராஜ்யசபாவின் தற்போதைய எண்ணிக்கை 236. பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பா.ஜ., கூட்டணிக்கு (பா.ஜ.,98; ஜேடியூவின் 04; அஜித்பவார் என்சிபி 03; தெலுங்குதேசம் கட்சியின் 02 ) உள்ளிட்ட மொத்தம் 125 எம். பி., க்கள் ஆதரவு உள்ளது.

ஆனால், இந்தியா கூட்டணிக்கு ராஜ்யசபாவில் மொத்தமே 88 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ள நிலையில்,நள்ளிரவு 02:45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளது. இதற்கு எதிராக 95 பேர் ஓட்டளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Waqf Board Amendment Bill passed in Rajya Sabha with the support of 128 MPs


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->