தொடங்கியது வயநாடு இடைத்தேர்தல்!...விறுவிறுப்பாக வாக்களிக்கும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று  காலை 7 மணிக்கு அங்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணிவரை பொதுமக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்யலாம் என்று  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி  எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்த  இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில்  பிரியங்கா  காந்தி போட்டியிடும் நிலையில், இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜ.க சார்பில் நவ்யா ஹரிதாஸ் களம் காண்கின்றனர்.

தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக ர். மொத்தம் 1,354 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று பிரதானக் கட்சிகள் உள்பட 16 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் காண்கின்றனர். வயநாடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wayanad by elections have started people are voting enthusiastically


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->