டெல்லியில் வாழ முடியுமா?....மிகவும் மோசமானது காற்றின் தரம்!...மக்களின் நிலை இது தான்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு 432 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்றும் காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் புகை மூட்டம் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட  பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

டெல்லியில் உள்ள  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்தது. இதனால்  ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டது.

மேலும், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பதான்கோட் விமான ஓடுபாதையில் இன்று காலை 5:30 மணிக்கு
பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்தது. இதே போல், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் விமான நிலையத்தில் இன்று காலை 7க்கு தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Can you live in delhi very bad air quality this is the condition of people


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->