எப்படி இருக்கிறார் ஆளுநர் இல.கணேசன்..? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்.!
West Bengal governor Ela Ganesan health Report
தமிழக பாஜக மூத்த தலைவரான இல.கணேசன், மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் இல.கணேசன் அவர்கள் மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இல.கணேசன் நெஞ்சுவலி காரணமாக காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் நாளை இரவு அல்லது புதன்கிழமை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
West Bengal governor Ela Ganesan health Report