அந்த 4 ரகசிய வேட்பாளர்கள் யார்?...ஹரியானா சட்டசபை தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Who are those 4 secret candidates Haryana Assembly Elections Congress candidate list released
ஹரியானாவில் வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து வருகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சி நேற்று மொத்தம் 40 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. வேட்பாளர் பட்டியலில் ஹரியானா காங்கிரஸ் முகமும் முதல்வர் பதவி கனவில் இருப்பவருமான ரன்தீப்சுர்ஜேவாலவின் மகன் ஆதித்ய சுர்ஜேவாலாவும் இடம் பெற்றுள்ளார். மேலும், கைதால் சட்டசபை தொகுதியில் ஆதித்ய சுர்ஜேவாலா போட்டியிடுகிறார்.
இதனையடுத்து 5 பேர் கொண்ட 4-வது வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இதுவரை காங்கிரஸ் கட்சி மொத்தம் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், எஞ்சிய 4 இடங்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மேழும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
English Summary
Who are those 4 secret candidates Haryana Assembly Elections Congress candidate list released