மக்கள் பணிக்கு ஏன் இத்தனை கட்சிகள் ? விஜயை சீண்டிய நடிகர்!! - Seithipunal
Seithipunal


விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் விஷாலும் கட்சி தொடங்க போவதாக செய்திகள் வெளிவந்தன. அதை உறுதி செய்வது போல் அவரின் கொடியும் மீடியாவில் வைரலானாது.  இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஷால் கூறுகையில், 

“வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எங்கள் நற்பணி இயக்கம், குறிப்பிட்ட நாட்கள், பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் செயல்படும். எங்கே பிரச்சனைகள் வந்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு சொல்லிவிடுவார்கள். அவற்றை உடனே சரி செய்துவிடுவோம். 

படப்பிடிப்பிற்கு வெளியூர் செல்லும் போது, அந்த பகுதில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். பல இடங்களில் அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. இதுபோல் நற்பணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார்.

விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கூறுகையில்,  உண்மையிலேயே ஒரு ரசிகனா, தமிழ்நாட்டில் இருக்கும் குடிமகனா விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

என் கட்சி கொடி, பெயர் குறித்து இபோது எதுவும் பேச தேவை இல்லை. மக்களுக்கு தொண்டாற்ற  இத்தனை கட்சி தேவையில்லை.  எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான். 

அரசியல் என்பது  பொழுதுபோக்கிற்காக வந்துட்டு போகிற இடமும் கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்திருப்போம். அந்த வகையில் அனைவரும் அரசியல்வாதி தான். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்  கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நான் யாருக்கு வாக்களித்தேன்  என்பதை நேரம் வந்தால் சொல்லுவேன். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why so many parties for people's work? Actor who scolded Vijay!!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->