சிக்குவாரா சித்தராமையா?...சுற்றி வளைக்கும் நீதிமன்றங்கள்!
Will it get caught siddramaiah encircling courts
கடந்த 2021ம் ஆண்டு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் மனு மீதான தீர்ப்பு நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில், சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.
இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முடா ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Will it get caught siddramaiah encircling courts