கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதோரை, இஸ்லாமியரை அனுமதிப்பீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்வி..?
Will you allow non Hindus and Muslims in the temple administration Supreme Court question
சமீபத்தில் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வஃக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து, வக்ஃபு சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல், த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், இன்று வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மசோதாக்களை உச்சநீதிமன்ற தலைமையை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 02 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில் நிர்வாகத்தில் இஸ்லாமியரை அனுமதிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன், இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்களை அனுமதிப்பீர்களா என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதோரை நிர்வாகிகளாக சேர்க்கலாமா? என்ற கேள்விக்கு, ஒன்றிய அரசு வெளிப்படையாக பதில் கூற வேண்டும் என் வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாங்கள் நீதிமன்ற இருக்கையில் அமரும் போது எந்த மதமும் எங்களுக்கு கிடையாது. அனைத்து தரப்பினரும் சமமே; எவ்வாறு இப்படி நீங்கள் ஒரு ஒப்பீட்டை கூற முடியும்? என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், வஃக்பு சட்டத்துக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. மேலும், ஆலோசனை வழங்கும் குழுவில் வேறு மதத்தைச் சேர்ந்தவரை கோயில் நிர்வாக வாரியத்தில் உறுப்பினராக நியமிக்கலாமா? என்றும், வக்ஃபு வாரியத்தில் உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் எனவும், ஆட்சியர் நடவடிக்கைகளைத் தொடரலாம், ஆனால் புதிய விதிகள் அமலுக்கு வராது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்கை நாளை மதியம் 02 மணிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், வக்ஃபு வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Will you allow non Hindus and Muslims in the temple administration Supreme Court question