உனக்கு 65, எனக்கு 85.., பேரக்குழந்தைகள் முன்னிலையில் நடந்த காதல் கல்யாணம்.!
karnataka old lovers marriage
கர்நாடக மாநிலத்தில் 85 வயது தாத்தாவுக்கும், 65 வயது பாட்டிக்கும் திருமணம் நடந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரின் உதயகிரி நகரில் வசித்து வருபவர் முஸ்தபா (85 வயது). இறைச்சி கடை உரிமையாளரான இவருக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.
ஒன்பது பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்து அனைவரும் தனிக்குடித்தனம் சென்று விட்ட நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முஸ்தபாவின் மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் தனிமையில் பாடிவந்த முஸ்தபா தனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது என்பதை உணர்ந்துள்ளார்.
இதனை அடுத்து அதே பகுதியில் தன்னை போலவே தனிமையில் வசித்து வந்த பாத்திமா பேகம் (65 வயது) மூதாட்டியை நேரில் சந்தித்து நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முஸ்தபா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகம் ஏற்றுக் கொள்ளவே, மறுபுறம் முஸ்தபாவின் மகன்கள், மருமகள்கள் பேரக் குழந்தைகள் அனைவரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அனைவர் முன்னிலையிலும் முஸ்தபா - பாத்திமா பேகத்திற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த திருமணத்தில் முஸ்தபாவின் திருமணத்தில் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், முஸ்தபாவின் வீட்டிலேயே இந்த திருமணம் நடைபெற்றதாகவும் முஸ்தபாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த திருமணம் தற்போது கர்நாடக மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
karnataka old lovers marriage