திருச்சி | இரு கல்லூரி மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட காதல்! அடித்து உதைத்து விரட்டி அனுப்பிய பெற்றோர்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகே இளம் பெண்ணை காதலித்த இளம் பெண்ணுக்கு தருமடி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனது காதலியை தேடி சென்ற பெண்ணை, காதலின் பெற்றோர் அடித்து, உதைத்து துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்துறை சேர்ந்த கல்லூரி மாணவி, திருச்சியில் படிக்கும் போது மற்றொரு மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

நட்பாக இருந்த இவர்கள், திடீரென ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, தனது மகளை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருச்சி மாணவி, தனது காதலியை தேடி கன்னியாகுமரியில் உள்ள அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்த, திருச்சி மாணவியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடித்து உதைத்து விரட்டி அடித்து உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy college girs love issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->