இஸ்லாம் பையன், இந்து பொண்ணு! மதம் மாறி திருமணம்! போலீசுக்கு அதிர்ச்சி கொடுத்த காதல் ஜோடி! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த காதலனை திருமணம் செய்ய 30 வயது இந்து பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் திருமணம் ஹிந்து முறைப்படி செய்து கொண்டுள்ளார்.

பஸ்தி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 34) அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். ஆனால், வெவ்வேறு மதம் என்பதால் இக்காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, காதலன் மதம் மாறி தனது பெயரை சிவசங்கர் சோனி என மாற்றிக்கொண்டு திருமணம் செய்ய முடிவு செய்தார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறை இரு வீட்டாரையும் அழைத்து விசாரணை நடத்தியது. புகாரில், காதலன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கருவைக் கலைக்க வற்புறுத்தி மிரட்டியதாக குற்றம் சாட்டினார். 

விசாரணையின் பின்னர், சதாம் உசேன் தனது பெயரை மாற்றி, காதலியை ஹிந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்துகொண்டார். 

தங்களின் திருமணத்திற்கு பின் போலீசாருக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். அதாவது காதலன் வீட்டில் திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளாததால், இருவரும் சேர்ந்து திட்டமிட்டு பொய்யான புகாரை காவல்நிலையத்தில் அளித்ததாக தெரிவித்து உள்ளனர் என்பது தான் அது. 

இதனை அடுத்து போலீசார் திருமண வாழ்த்து உடன், பொய் புகார் அளித்ததற்கு எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uttar pradesh love marraige case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->