ஒரே மாதத்தில் 71 லட்சம் வாட்சப் கணக்குகள் முடக்கம்.!
71 lakhs whatsapp accounts ban in india
இந்தியாவில், சுமார் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ் ஆப் கணக்குகள் புழக்கத்தில் உள்ளன. நாள்தோறும் இவற்றின் எண்ணிக்கை புதிதாக அதிகரித்தும் வருகிறது. அதே சமயம் இதற்கு இணையாக மோசடி மற்றும் முறைகேடான கணக்குகள் தடைக்கு ஆளாகியும் வருகின்றன.
மேலும், பயனர்கள் மத்தியிலிருந்து கிடைக்கப்பெறும் புகார்கள் தொடர்பான நடவடிக்கையின் அங்கமாகவும், இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் முக்கியமாக பயங்கரவாதம், குழந்தைகள் பாலியல், போதைமருந்து கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 71,96,000 கணக்குகள் தடைக்கு ஆளாகி உள்ளன. இந்த கணக்குகளில் சுமார் 19,54,000 கணக்குகள் வாட்ஸ் ஆப் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கையின் கீழ் தடைக்கு ஆளாகின. நவம்பர் ஒரு மாதத்தில் மட்டும் 8841 புகார்களை பயனர்களிடம் இருந்து பெறப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ் ஆப், பயனர்கள் மற்றும் அரசின் குரலுக்கு உடன்பட்டு, வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வரிசையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 75 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
71 lakhs whatsapp accounts ban in india