மீண்டும் திராவிடர்களை கிழித்து தொங்கவிட்ட நடிகை கஸ்தூரி!
Actress Kasthuri criticized Dravidians again
தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள், ஒரு நாள் பட்டாசு விதித்தால் காற்றுமாசு உயர்ந்துவிடாது. பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சம் தொழிலாளர்கள் சிவகாசியில் உள்ளனர் அவர்களின் வாழ்வாதாரத்தை காப்போம் என செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார்.
இதனை நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், "பாசிச பாஜக அண்ணாமலை தீபாவளி கொண்டாடுங்கன்னு சொன்னதுனாலே, இனமான திராவிடியா பசங்க எல்லாரும் இப்போ தீபாவளியை புறக்கணிக்ச்சாகணுமே, என்ன பண்ணுறது? "விடுமுறை நாள்"னு சொல்லி பட்டாசு வெடிச்சு பிரியாணி திங்க வேண்டியதுதான்" என திராவிட சித்தாந்தம் கொண்டவர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு திமுகவினர் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் நடிகை கஸ்தூரியின் மீது வைக்கப்பட்டது. மேலும் திரைப்பட இயக்குனர் நவீன் நடிகை கஸ்தூரியின் பதிவிற்கு கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். திமுகவின் உடன்பிறப்புகள் ஒரு படி மேலே போய் கஸ்தூரியின் நடத்தை பற்றி எல்லாம் விமர்சனம் செய்திருந்தனர். இதற்கு கைமாறாக திராவிடத்தை எதிர்க்கும் பாஜகவினரும், வலதுசாரி சிந்தனை கொண்டவர்களும் #திராவிடியா_பசங்க என்ற ஹேஷ்டேகை இன்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்பொழுது தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் ட்விட்டர் பதிவில் கடுமையான வார்த்தைகள் உபயோகப்படுத்தி திராவிடர்களை கிழித்து தொங்க விட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் "திராவிடியர்கள் தங்கள் தாய், சகோதரி, தலைவி போலவே என்னையும் கருதுகிறார்கள் என்பது புரிந்துவிட்டதால், அந்த அறியாமையை அன்போடு பொறுமையாக எதிர்கொள்கிறேன். பாவம், திராவிடிய பற்றாளர்களின் அறியாமையை போக்குவது நம் சமூக கடமை அல்லவா? #திராவிடியா_பசங்க" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Actress Kasthuri criticized Dravidians again