மக்கள் பிரச்சனையை திசை திருப்ப திமுக கையாளும் யுத்தியா?
Dravida model tshirt photo going to viral
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே கொண்டு செல்ல திமுக பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் பெரும்பாலான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது திமுக. அதேபோல் கிரிக்கெட் விளையாட்டுகளிலும் திமுகவின் ஆதரவாளர்கள் திமுகவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பதாகைகள் மூலமும் டீ-ஷர்ட் அணிந்தும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
திமுகவின் ஆதரவாளர் ஒருவர் சென்ற ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் பொழுது திமுகவின் திராவிட மாடல் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்தார். அதே நபர் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் பொழுது திமுக கொண்டு வந்த திட்டம் குறித்து எழுதப்பட்ட டி-ஷர்டை கையில் வைத்துக் எடுக்கப்பட்ட புகைப்படம் திமுகவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நபர் கையில் வைத்திருந்த டீ-ஷர்டில் "அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி!" என ஸ்டாலினின் புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் வைத்திருந்தார். இந்தப் புகைப்படத்திற்கு பின்னூட்டமாக "மெல்பர்ன் நகர் வரை சென்ற திராவிட மாடல்" என எழுதப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இன்று பகிரப்பட காரணம் என்ன?. திமுக ஆட்சியை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தற்பொழுது தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் திமுக அரசின் மீது மக்கள் வைக்கும் விமர்சனங்களில் திசை திருப்பவே திமுகவால் இது போன்ற புகைப்படங்கள் பகிரப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Dravida model tshirt photo going to viral