அமைச்சர் கனவுடன் வளம்வரும் அதிமுகவில் இருந்து திமுக தாவிய முக்கிய புள்ளி.. கலக்கத்தில் அறிவாலயம்.!
Ex Minister Kannapan plan to Ministry Posting at DMK Party
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கடந்த 1991 ஆம் வருடம் முதல் 1996 ஆம் வருடத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சாரத்துறைக்கு அமைச்சராக பணியாற்றி வந்தவர் ராஜ கண்ணப்பன். இவர் கடந்த 1996 ஆம் வருட தேர்தலில் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் தொகுதி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இராம. சிவராமனிடம் தோல்வியை தழுவினார்.
இதன்பின்னர் சிறிது சிறிதாக கட்சியிலும் செல்வாக்கை இழந்த நிலையில், திமுகவின் ஆட்சிக்காலத்தில் சொத்துகுவிப்பு வழக்கு தொடங்கப்பட்டது. இதனையத்து கடந்த 2000 ஆம் வருடத்தில் அதிமுகவில் இருந்து விலகி, மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியினை உருவாக்கினார். கடந்த 2001 ஆம் வருடத்தின் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு, 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இதனால் முன்னாள் அமைச்சர் தமிழ்குடிமகனின் இளையான்குடி தொகுதி ராஜகண்ணப்பனிற்கு சென்றதால், தமிழ்க்குடிமகன் திமுகவில் விலகி அதிமுகவில் ஐக்கியம் ஆனார். இதே நேரத்தில், கண்ணப்பனின் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இதனால் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த கண்ணப்பன், 2006 ஆம் வருட தேர்தலில் இளையான்குடியில் போட்டியிட்டு வெற்றியை அடைந்தார்.
அப்போது அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அன்றைய சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக இருந்து வந்த கே.ஆர்.பெரிய கருப்பனிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் மீண்டும் தனது மக்கள் தமிழ் தேசம் கட்சியை துவங்குவதாக தகவல் வெளியான நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரை ஏற்றுக்கொண்டு கடந்த 2009 ஆம் வருட தேர்தலில் சிவகங்கை மக்களவை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து நிறுத்தினார். அப்போது வரை 3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வந்த ப.சிதம்பரம், 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்தார்.பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 2011 ஆம் வருடத்தில் திருப்பத்தூர் தொகுதியில் நிறுத்தவே, அதிமுக ஆட்சியை அமைத்திருந்ததும் கண்ணப்பனால் தேர்தலில் வெற்றியை பெற இயலவில்லை.
இதனையடுத்து கண்ணப்பனிற்கு அதிமுகவில் முக்கியத்துவம் குறையவே, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து பின்னர் தீபா அணியில் இருந்தார். தீபாவும் இறுதி நேரத்தில் கையை விரித்ததால் அதிமுகவிற்கு வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே சிவகங்கை அல்லது இராமநாதபுரம் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த இரண்டு தொகுதிகளும் பாரதிய ஜனதா வசம் சென்றது.
இதனால் கடும் விரக்திக்கு உள்ளான கண்ணப்பன் ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்தார். மேலும், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதியன்று மதுரையில் பிரம்மாண்ட கூட்டம் ஏற்படுத்தி ஸ்டாலினின் தலைமையில் திமுகவில் ஐக்கியம் ஆனார். இப்போது வரும் தேர்தலில் திமுகதான் ஆட்சிக்கு வரும் என்ற உடன்பிறப்புகளின் கனவுகளுடன் இவரும் மிதப்பதால், இம்முறை அமைச்சராக நினைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Ex Minister Kannapan plan to Ministry Posting at DMK Party