எப்பவுமே சிங்கிளா வரும் சிங்கம்..!! நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்..!! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள் இன்று. இதனை ஒட்டி அவருடைய ரசிகர்கள் உலகம் முழுவதும் ரஜனிகாந்த் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் ரத்ததானம், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், திரை துறையினரும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரும் தற்போதைய ராஜ்யசபா எம்பியுமான ஹர்பஜனத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "செப்பு மிங்களாகி வரும் தங்கம் அல்ல அவர்... எப்பவுமே சிங்களா வரும் சிங்கம்!! சூப்பர் மனிதர் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை. நீடூழி வாழ்க தலைவா..!!" என தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harbhajan Singh wishes actor Rajinikanth on his birthday in Tamil


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->