பன்றிக்கறி சாப்பிடும் முன் ‘பிஸ்மில்லா’ கூறிய பெண்ணுக்கு சிறை!
Indonesia leena muharji video issue
இந்தோனேசிய நாட்டில் பெண் ஒருவர் பன்றிக்கறி சாப்பிடும் முன், இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வாக்கியத்தை உச்சரித்ததால், அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் பிரபலமான லினா முகர்ஜியை (வயது 33) சமூகவலைத்தளங்கள் மூலம் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் லினா முகர்ஜியின் வீடியோ ஒன்று டிக்டாக் மற்றும் இதர சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி சர்ச்சையாகியது.
சர்ச்சையான அந்த வீடியோவில் லினா முகர்ஜி கையில் பன்றி இறைச்சித் துண்டை வைத்துக் கொண்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தையை தெரிவிக்கிறார்.
பின்னர் அந்த பன்றிக்கறியை லினா முகர்ஜி சாப்பிடுவது பதிவாகியுள்ளது. இதில் ‘பிஸ்மில்லா’ என்ற வார்த்தை ‘இறைவனின் பெயரால்’ என்று அர்த்தம்.
மேலும், இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்ட உணவான பன்றிக்கறியை, இந்த வார்த்தையை பயன்படுத்தி லினா முகர்ஜி சாப்பிட்டது தான் பெரும் சர்ச்சைக்கு காரணம்.
இஸ்லாமியர்கள் பலரும் லினா முகர்ஜி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்க விடுத்த நிலையில், இந்தோனேசிய போலீசார் அவரை கைது செய்து, பாலேம்பாங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 250 மில்லியன் ருபையா அபராதம் விதித்து உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின்போது, ஒரு ஆர்வத்தில் அப்படி ஒரு வீடியோவை எடுத்ததாக லினா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
English Summary
Indonesia leena muharji video issue