இன்ஸ்டா ஃபேக் ஐடியை நம்பி, தற்கொலை செய்த இளம்பெண்! இளம் தலைமுறைக்கு தக்க பாடம்!
Instagram Fake ID Love case
இன்ஸ்டாகிராமில் தனது தோழியின் ஃபேக் ஐடியால், காதலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் ஒருவரின் சோக முடிவு, இந்த இளம் தலைமுறைக்கு நல்ல பாடம் புகட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், கோரேகான் பகுதியைச் சேர்ந்த 24 வயதே ஆன ஒரு இளம் பெண், தனது பெண் தோழியை கிண்டல் செய்வதற்காக, மனுஷ் என்ற ஆண் பெயரில் போலியான இன்ஸ்டாகிராமை தொடங்கி, அவருடன் நட்பாக பழகியுள்ளார்.
மேலும், நாட்கள் சேலை செல்ல சில ஆசை வார்த்தைகளை கூறி, காதல் செய்வது போலவும் நடித்து வந்துள்ளார். ஆனால் இதை எல்லாம் நம்பிய அந்த பெண்ணின் தோழி, இன்ஸ்டா ஃபேக் ஐடி மனுஷ் மீது காதல் வயப்பட்டு, அவரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கூட "அது ஆண் இல்லை. என்னுடைய ஃபேக் ஐடி அது" என்று சொல்லாத அந்த இளம் பெண், மேலும் ஒரு விபரீத விளையாட்டை நிகழ்த்தியுள்ளார்.
அந்த ஃபேக் ஐடி மனுஷ்க்கு, தந்தை சிவம் பாட்டில் என்ற ஒரு ஃபேக் ஐடியை ஓபன் செய்து, அதன் மூலம் தனது தோழிக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார்.
அதாவது "நான்தான் மனுஷ் அப்பா என்று மெசேஜ் அனுப்பி, மனுஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை இனி தொடர்பு கொள்ள முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தோழி, கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கடந்த பிறகு, உயிரிழந்த பெண்ணின் மொபைலில் உள்ள இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்து அவரின் குடும்பத்தார் இதனை கண்டறிந்துள்ளனர்.
மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமான அந்த 24 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Instagram Fake ID Love case