அதிரடியாக நீக்கப்பட்ட முரசொலியின் முகநூல் பக்கம் - நடந்தது என்ன?
murasoli face book page delete
அதிரடியாக நீக்கப்பட்ட முரசொலியின் முகநூல் பக்கம் - நடந்தது என்ன?
திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியின் முகநூல் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியதுடன், விரும்பத்தகாத வீடியோக்களும் பதிவேற்றம் செய்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் முரசொலியின் முகநூல் பக்கம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
முரசொலி முகநூல் பக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்கெனவே ஒருமுறை ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முரசொலி மேலாளர் எஸ்.ராஜசேகரன் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில் "கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி முகநூல் பக்கம் முடக்கப்பட்டதோடு, தொடர்ந்து விரும்பத்தகாத படங்கள் பதிவிட்டப்பட்டதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றால், சுமார் 17,000 பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், உடனடியாக முரசொலி முகநூல் பக்கத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து முகநூல் பக்கத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வந்தனர்.
ஆனால், அது தோல்வியடைந்ததை, தொடர்ந்து விரும்பத்தகாத படங்களும் பதிவிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அந்த பக்கம் முழுமையாக நீக்கப்பட்டது. இதையடுத்து, முரசொலி பத்திரிக்கையின் பெயரில் புதிய முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு, அதில் இருந்து பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சைபர் கிரைம் போலீஸார், பொதுமக்களும் தங்களது சமூகவலைதளப் பக்கங்களின் கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
murasoli face book page delete