அசத்தல் அப்டேட் கொடுத்த வாட்சப் நிறுவனம்.!
new update in whatsapp
பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்க்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயனர்கள் உள்ளனர். அதனால், வாட்ஸ் அப் நிறுவனம் புது புது அப்டேட்டுகளைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.
அதாவது, வாட்ஸ் அப் சேனல்களை இயக்குபவர்கள் மீடியா ஃபைல்களை ஒழுங்கமைப்பதை எளிதாகச் செய்ய இயலும். சேனலில் ஷேர் செய்யப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆல்பத்தில் சேமிக்கப்படும்.
அதன் படி, சேனலில் மீடியாவை ஷேர் செய்ய பயனர்கள் நேரடியாக இந்த ஆல்பத்திற்குச் செல்ல முடியும். ஒரு வாட்ஸ் அப் சேனலின் அட்மின் ஒரு சேனலில் தொடர்ச்சியாக பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.
அதனை வாட்ஸ் அப் தானாகவே ஒன்று சேர்த்து ஆல்பமாக ஒழுங்கமைத்தது. மேலும், சேனலைப் ஃபாலோ செய்பவர்கள் அனைத்து சேகரிப்பையும் அணுக ஆட்டோமேட்டிக் ஆல்பத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே சாட்கள் மற்றும் க்ரூப்களுக்கு இருந்து வந்த நிலையில், தற்போது இந்த வசதி சேனல்களிலும் சேர்க்கப்படுகிறது.
இந்த வசதியை கூகுள் பிளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யும் ஆண்ட்ராய்டு பயனர்களால் பெற முடியும். வரும் நாட்களில் இந்த வசதி படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.