எனக்கும், என் பொண்டாட்டிக்கும்.. ஏன் என் அம்மாவை தவிர... உதயநிதியை கதற கதற செய்யும் நெட்டிசன்கள்..!!
Twitter Trending about DMK Drama Politics
தமிழகத்தில் கடந்த 22 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பிக்கும் பொருட்டு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்தனர். சமூகநீதி பேசும் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. பொதுவெளியில் பேசும் போதெல்லாம் ஆகா ஓகோவென பிற மதங்களை புகழ்ந்து தள்ளும் திமுக, இந்து மக்களை இகழாமல் இருந்ததே இல்லை.
இதில், பெரியாரிய கொள்கையை பின்பற்றும் நபர்கள் மற்றும் திராவிடத்தை தூக்கிப்பிடிக்கும் நபர்களின் பேச்சுக்களை கேட்க கூட இயலாத வகையில் அவதூறாக பேசியிருப்பார்கள். பிற மத பண்டிகளைகளுக்கு சகோதரத்துவத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஏகபோக வாழ்த்துக்களும், இந்து மத பண்டிகைக்கு மட்டும் இழிவுபடுத்தும் கருத்துக்களும், கண்டுகொள்ளாதது போல நடிப்பும் என இருந்து வருகிறது. இந்த விஷயங்களில் உச்சபட்சமாக தேர்தல் நேரங்களில் திமுக இந்துக்களுக்கு அன்பானவன் என்று கபடநாடகம் ஆடிய பல ஆட்டங்களும் நினைவு வருகிறது. பெரியார் பேசிய உண்மையான விஷயத்தையே பரப்பாத திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள், சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் பரபரப்பிற்க்காக பல சில்மிஷ வேலைகளிற்கு பின்னால் இருந்து தூண்டுகோலாகவும் செயல்பட்டு வருகிறது.
திரைத்துறையில் திட்டமிட்டே களமிறக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், திரைத்துறை மூலமாக கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் பிரபலமடைந்தார். பின்னர் அரசியலில் நுழைந்து, இப்போது அரசியலை 10 விழுக்காடு கூட புரிந்துகொள்ளாது அட்மினை வைத்து பல சர்ச்சை பதிவு, திராவிடத்தை தூக்கிப்பிடிப்பது என இருந்து வருகிறார். உதயநிதி திரைத்துறையில் அறிமுகமாகும் காலங்களில் நன்றாக நடிக்கிறாரே என்று கூறிய பலரும், இப்போது அரசியல் களத்திலும் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்துகிறாரே என்று பேசும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
சில நேரங்களில் உதயமான பேபி, மான்கறி போன்ற விஷயத்திலும் நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னமானார். இப்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கருத்துக்களே தெரிவிக்காமல் இருந்து வந்து திமுக மீண்டும் நெட்டிசன்கள் கையில் சிக்கியதால், தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி விநாயகரின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இது அவரது வீட்டில் எடுக்கப்பட்டதா? என்பது குறித்த விபரம் தெரியவராத நிலையில், உங்களின் முட்டுக்கொடுக்கும் நடிப்பு பிரம்மதமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துக்களில் வசைபாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், தன்னை பெண்ணியவாதி மற்றும் பெரியாரிஸ்டாக அடையாளப்படுத்திக்கொள்ளும் பனிமலர் மற்றும் அரசியல் விமர்சகர் என்று பெயரில் தி.மு.கவின் கைப்பாவையாக இருந்து வரும் சவுக்கு சங்கர் உதயநிதியின் ட்விட்டிற்கு பதில் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பனிமலர் உதயநிதியின் பிள்ளையார் படத்திற்கு தேவையில்லாத ஆணி என்று பதிவு செய்ததும், சவுக்கு சங்கர் ஒட்டுமொத்த கட்சியின் கொள்கையை ஒரேயொரு புகைப்படத்தில் தரைமட்டமாக ஆக்கிவிட்டதாக கூறி பதிவு செய்ததும் பெரும் பிரச்சனையை ட்விட்டர் தளத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இந்த ட்விட்களை பதிவு செய்த இருவரும், சில நிமிடங்களுக்கு உள்ளாகவே, இதனை நீக்கவும் செய்துள்ளனர். இதனை முன்னதாகவே சுதாரித்து நெட்டிசன்கள் அனைவரும் புகைப்படமாக பதிவு செய்து வைத்துவிட்டு, இணையத்தில் #தேவையில்லாத_ஆணி_உதய் என்ற பெயரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். தி.மு.க மற்றும் இப்போதைய போலி புரட்சியாளர்கள், பெண்ணியவாதிகள் எடுத்து செல்லும் புரட்சியெல்லாம், தனிமனித உணர்வுகளுக்கும், பாசத்திற்கும் மதிப்பில்லாதது என்பது மட்டுமே உண்மை.. இதில் நடுநிலைவாதி என்ற பெயரில் மனிதம் ஒன்றே தீர்வாகும் என்று பதிவு மட்டும் செய்துவிட்டு, பேசுவதெல்லாம் பஞ்சாயத்துக்கும் வகையில் மட்டுமே இருக்கிறது என்பதே நிதர்சனம்.
யாரும், எந்த கொள்கையையும் பின்பற்ற கூடாது என்று இங்கு இல்லை. உங்களுக்கு ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால், அதனை ஏற்றுக்கொண்டு அவர் வழியில் அவரது கொள்கையை பரப்பினால் மட்டுமே அது புரட்சியை சாரும். மாறாக கொள்கையை வைத்து விமர்சனங்கள் முன்வந்தால், அது பின்னாளில் பெரும் பிரச்சனையை மட்டுமே ஏற்படுத்தும். குடும்பம் என்ற கட்டமைப்பை கொண்டு வந்த தமிழக மக்களின் பாரம்பரியம், எதிர்வரும் காலத்தில் தறிகெட்டு செல்வது போலி புரட்சியாளர்களால் ஊக்குவிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தில் இருக்கும் உண்மையை முழுவதுமாக புரிந்துகொள்ளாதது வரை எதுவும் புரியப்போவதில்லை என்பதே உண்மை. பல மாற்றங்கள் இக்காலத்திற்கேற்ப மாறியும், பல விஷயங்கள் தீமையை நோக்கி செல்வதே வருத்தம் அளிக்கிறது என்று உண்மையான புரட்சியாளர்களும், பெரியாரிஸ்டுகளும், மக்களும் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த விஷயத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், எனக்கோ என் மனைவிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், எனது தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவார்கள். எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில் முன்னோர்களின் உருவப் படங்களும் இருக்கிறது. என் தாய் நம்பும் சில கடவுளின் படங்களும் இருக்கிறது. முக்கியமான முடிவுகள் எடுக்கையில், முன்னோர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்து விட்டு செய்வது எங்கள் வழக்கம். பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கி இருந்தார். அந்த சிலையை நேற்று இரவு பார்த்த எனது மகள், இந்த சிலையை எப்படி செய்வார்கள்? என்று கேட்டார்.
இந்த சிலையை களிமண் கொண்டு செய்வார்கள் என்று கூறினேன். இதனை தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்று விடுவார்கள் என்று தெரிவித்தேன். இந்த சிலையை எதற்கு தண்ணீரில் போட வேண்டும் என்று எனது மகள் கேட்கவே, அது தான் முறை என்று கூறினார்கள். அடுத்த வருடத்திற்கு புதிதாக வாங்குவார்கள் என்று கூறினேன். அதற்கு முன்னதாக சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்கள் என்று அவர் கேட்டதால், அவரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இதே பதிவு தேர்தல் நெருங்கும் சமயத்தில் காணாமல் போய், கனிமொழி தனது தாயுடன் திருச்செந்தூர் முருகனிடம் சரணடைந்தது போல, உதயநிதியும் விரைவில் ஏதேனும் ஆலயத்தில் சென்று அரோகரா, கோவிந்தா, நமச்சிவாயா போட்டாலும் ஆச்சரியத்திற்கு இல்லை. இவர்களின் புரட்சியெல்லாம் வெறும் படத்தில் மட்டும் தான்.. மீதமுள்ளதை படப்பிடிப்பு துவங்கும் போது மாலை அணிவித்து பூஜை செய்வதிலேயே பொங்கல் ஆகிவிடும். முன்னதாக பழனி கோவிலில் உதயநிதி பஞ்சாமிர்தம் வாங்க சென்றாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Twitter Trending about DMK Drama Politics