மிஸ் ஆன திருநீறை வைத்து அடுத்த ரவுண்ட் மத அரசியலை ஆரம்பித்த பாஜக! - Seithipunal
Seithipunal


அசல் திருவள்ளூர் உருவப்படம் எது?

பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பிரச்சாரம் செய்து வருகின்றன. பெரியார் முதல் ஸ்டாலின் வரை அனைவரையும் ஹிந்துக்களுக்கு எதிரானவர் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வள்ளலாரின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக தமிழக அரசு அறிவித்தது. வள்ளலார் பிறந்த நாள் அன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் "ஆன்மிகத்தை அரசியலுக்காகவும் தங்கள் சொந்த சுயநலத்துக்காகவும் உயர் தாழ்வு பாகுபாட்டிற்காகவும் பயன்படுத்துவோருக்கு எதிராக மட்டுமே இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி என கூறி இருந்தார். இதனால் திமுக ஹிந்துகளுக்கு எதிரான கட்சி இல்லை இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான கட்சி என் ஸ்டாலின் மறைமுகமாக கூறியிருந்தார். இது பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியது. திமுகவிற்கு எதிராக கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பம் உடைந்து விடுமோ என பதற்றத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் வள்ளலாரின் பிறந்த நாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் உள்ள வள்ளலார் புகைப்படத்தில் விபூதி இல்லாதது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய முயல்வதாக திமுக குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில் வள்ளலாரின் நெற்றியில் இருந்த விபூதி நீக்கப்பட்டது குறித்து பாஜக தரப்பில் ரகசிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து விவாதித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

இதற்கு முன்னோட்டமாக பாஜகவை சேர்ந்த அமிர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடைய உடன் கூடிய திருவள்ளூர் புகைப்படமும் வெள்ளை நிறத்தில் விபூதியற்ற திருவள்ளுவர் படமும் பதிவிட்டு இதில் எது உண்மையான திருவள்ளுவர் புகைப்படம் என கேள்வி எழுப்பி பதிவு செய்திருந்தார். இதற்கு பாஜகவை சேர்ந்த அனைவரும் காவி உடையில் இருப்பது உண்மையான திருவள்ளுவர் எனவும், நடுநிலையாளர்கள் திருவள்ளூருக்கு உருவமில்லை எனவும், திமுகவை சேர்ந்தவர்கள் வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலும் திருவள்ளுவரின் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். 

இதன் மூலம் தனது இரண்டாவது சுற்று மத அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள கருத்தை பின் தொடர்ந்து வாழ்வில் சிறப்பிக்காமல் அவர் எந்த உடை அணிந்திருந்தார் எந்த மதத்தைச் சார்ந்தவர் என ஆராய்ந்து அரசியலை முன்னெடுத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது பாஜக என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Which is the original Thiruvallur portrait asked by bjp member on tweeter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->