சவாலுக்கே சவால் விடும் ராசிக்கார்களுக்கு புத்தாண்டு ராசிப்பலன்கள்.! - Seithipunal
Seithipunal


2022
ஆங்கில வருட ராசிபலன்கள்: சவாலான செயல்களையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே...!!

2022ஆம் வருடமானது மீன ராசி அன்பர்களுக்கு தோற்றப்பொலிவில் புதிய மாற்றத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். குடும்ப விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் வருட மத்தியில் நடைபெறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் நினைத்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவுபெறும்.

பொருளாதாரம்:

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்புகள் மேம்படும். சிறு முயற்சிகளின் மூலம் தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு :

பெண்கள் கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறு மற்றும் குறுந்தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வியில் தன்னுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புராணக்கதைகளில் ஈடுபாடு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் நிறைவான சூழ்நிலைகள் காணப்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில மாற்றங்களின் மூலம் புதுமையான வாய்ப்புகள் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வீடு, மனை தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. கட்சி நிமிர்த்தமான செயல்பாடுகளின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து முடிவெடுக்கவும்.

நன்மைகள் :

மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய பொருட்கள் மற்றும் பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து, சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும் வருடமாக பிறக்கின்ற இந்த புத்தாண்டு அமையும்.

கவனம் :

தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் எதிர்காலத்தை சார்ந்த வியூகங்களை அமைக்கும் பொழுது தகுந்த ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்கவும்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வழிபாடு செய்துவர தொழில் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சிந்தனைகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2022 new year meenam Rasipalankal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->