ஆன்மிக ரகசியங்கள்... செல்வத்தை அள்ளித் தரும் ''அரச மர இலை''!  - Seithipunal
Seithipunal


அரச மரம் விநாயக பெருமான் வீற்றிருக்கும் மரங்களில் ஒன்று. வினைகள் தீர்க்கும் விநாயகருக்கு உகந்ததாக அரச மர இலை உள்ளது. பிரச்சனைகளை தீர்க்க பிள்ளையார் வீற்றிருக்கும் அரசமர இலைகள் போதும். 

அரச மரத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்வார்கள் என்பது ஐதீகம். அரச இலையை வைத்து சனிக்கிழமையில் மட்டும் பரிகாரம் ஒன்றை செய்தால் முழு பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் செய்ய வேண்டும். 

இதற்கு 5 அல்லது 3 அரச இலைகளைக் கங்காஜலம் கொண்டு கழுவ வேண்டும் இந்த கங்காஜலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பிறகு மஞ்சள், சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும். 

அரச இலை மற்றும் மஞ்சள் பேஸ்ட்டை பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு மஞ்சள் பேஸ்டை வலது மோதிர விரலால் எடுத்து அரச இலையில் ரீம் என்ற வார்த்தையை எழுத வேண்டும். 

பின்னர் அந்த இலையை மகாலட்சுமி தாயாரின் திருவுருவ படத்திற்கு முன்பு வைத்து பிரச்சனை குறித்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். 

இதனையடுத்து அந்த இலையை உங்களுக்கு எங்கு வைக்க வேண்டும் என தோன்றுகிறதோ அந்த இடத்தில் வைத்துவிடு வைத்து விடவும். பூஜை அறை, பணப்பை போன்றவற்றிலும் வைக்கலாம். சனிக்கிழமை நாள்களில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்வதால் நம்முடைய துன்பங்கள் நீங்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anmika rakaciyankal arasa mara ilai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->