''ஆன்மீக ரகசியங்கள்'': வெள்ளிக்கிழமைகளில் இதனை மறந்தும் செய்யாதீர்கள்.! - Seithipunal
Seithipunal


வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடிய சில காரியங்களால் நமக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கலாம். ஆனால் ஒரு சில காரியங்களை பெண்கள் கண்டிப்பாக செய்யக்கூடாது. வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை சுத்தப்படுத்தி வைத்தாலே செல்வம் செழிக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். 

அதிகாலையில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுக்கிரகம் உண்டு. அவ்வாறு பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்கள் சாதாரணமாக விளக்கேற்றி பூஜை செய்தாலே சகல சௌபாக்கியமும் கிடைக்கும். 

பெண்கள் செய்யக்கூடிய சில தவறுகளால் கடன் பிரச்சனை அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வெள்ளிக்கிழமைகளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

* வீட்டில் ஒட்டடை அதிகமாக சேரக்கூடாது. அப்படி இருந்தால் கடன் பிரச்சனை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் ஒட்டடை அடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடித்தால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை விரட்டி அடிப்பதற்கு சமம். 

* வெள்ளிக்கிழமையில் வீட்டில் அழுக்கு துணி இருந்தால் கடன் சுமை அதிகரிக்கும். இதனால் வியாழக்கிழமை துணி துவைத்து விடுவது நல்லது. வெள்ளிக்கிழமை நாட்களில் துணி துவைக்க கூடாது. எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்யக் கூடாது. 

* பெண்கள் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதே சமயத்தில் ஆண்கள் என்னை தேய்த்து குளிக்க கூடாது. அவ்வாறு செய்தால் வறுமை ஏற்படும். கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள். அதேபோல் ஆண்கள் முடி வெட்டவோ முகசவரம் செய்யவும் கூடாது. 

* கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வெள்ளிக்கிழமையில் வாங்கி நிரப்பிக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். 

* வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணி அளவில் நெய் தீபம் ஏற்றுவது நன்று. இதனால் தனவரவு பெருகும். வலம்புரி சங்கு, துளசி, தேன், பசும்பால், செந்தாமரை, வெந்தாமரை போன்றவை செல்வத்தை அதிகரிக்க செய்யும். இவை நமது வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும். 

* மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றி சொல்லக்கூடிய மகத்துவம் வாய்ந்த சாஸ்திரத்தை வீட்டில் உள்ள பெண்கள் அதிகாலை அல்லது அந்தி பொழுதில் படித்தாலோ அல்லது கேட்டாலோ வீட்டின் செல்வநிலை பெருகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anmika rakaciyankal Do not forget Fridays


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->