ஆன்மீக ரகசியங்கள்: வீட்டில் பண வரவை அதிகரிக்கும் கசகசா..!   - Seithipunal
Seithipunal


நமது வீட்டில் சமையல் அறையில் இருக்கும் ஒரு பொருள் தான் கசகசா. இந்த கசகசாவை வைத்து நாம் எளிமையாக செய்யும் பரிகாரம் மூலம் பணவரவை அதிகரிக்கலாம். 

மண் அகல் விளக்கை எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு அந்த விளக்கில் ஊற்றிய எண்ணெயில் சிறிதளவு கசகசா சேர்த்து விளக்கேற்ற வேண்டும். 

இந்த விளக்கை பூஜை அறையிலும் ஏற்றலாம் அல்லது வீட்டில் எந்த இடத்தில் ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அங்கு ஏற்றலாம். 

இந்த விளக்கை தினமும் ஒரு மணி நேரம் வீட்டில் ஏற்றி வைத்தால் பணவரவு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில், அரசு வேலையிலோ இருப்பவர்கள் எதிர்பார்த்த ஊதியம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை பெறுவதற்கு இது நல்ல வழி. 

இந்த விளக்கை ஒரு மணி நேரம் வீட்டிற்குள் ஏற்றி வைத்தால் கணக்கில்லாத அளவிற்கு பணம் வந்து சேரும். 48 தினங்களுக்கு இந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைக்க வேண்டும்.

ஒரு நாள் பயன்படுத்தும் எண்ணெய் திரியை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. புதியதாக மாற்றி பயன்படுத்த வேண்டும். 

இந்த விளக்கை வீட்டில் ஏற்ற தொடங்கி விட்டால் கடன் பிரச்சனைகள் தீரும். குலதெய்வத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anmika rakaciyankal increasing money in kasakasa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->