கும்பிபாகம் என்ற தண்டனைக்கு தவறு இதுவா?.. தப்பி தவறியும் செய்துவிடாதீர்கள்.!
Asper Garuda Puranam Punishment
நமது முன்னோர்களின் கூற்றுப்படி, நாம் செய்யும் நல்ல மற்றும் தீமையான செயல்களுக்கு கட்டாயம் எதிர்வரும் நல்ல பலன்கள் மற்றும் தீமையான விளைவுகளை நாம் சந்தித்தாக வேண்டும். கருடபுராணத்தின் படி நாம் செய்யும் தீமைகளுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் கூறப்பட்டுள்ளது.
தாமிஸ்ரம் :
பிறருக்கு சொந்தமான பொருளை அபகரிப்பது பெருங்குற்றமாகும் .பிறர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறர் குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருள்,மனைவி,குழந்தை இவற்றை அபகரிப்பவர்கள் அடையும் நரகம் தாமிஸ்ரம். இந்நரகத்தில் ஜீவனை எமக்கிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாளும் அடிப்பார்கள்..
அந்ததாமிஸ்ரம் :
கணவனும், மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது பாவமாகும். கணவன் மனைவியை வஞ்சித்தாலும், மனைவி கணவனை வஞ்சித்தாலும் அடையும் நரகம் அந்ததாமிஸ்ரம். இங்கு ஜீவன்கள் கடுமையான இருளில் விழுந்து, கண்கள் தெரியாத நிலையில் மூர்ச்சையாகி தவிக்க வேண்டும்.
ரௌரவம் :
பிறருடைய குடும்பத்தை கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருட்களை பறிக்கும் பாவச்செயலைப் புரிந்தவர்கள் அடையும் நரகம். இங்கு ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தால் குத்தி கொடுமையாக துன்புறுத்துவார்கள்.
மகாரௌரவம் :
மிகவும் கொடூரமான பிறரை வதைத்தவர்கள் பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகாரௌரவம். இந்நரகத்தில் குரு என்ற குரூரமான மான் இனத்தை சேர்ந்த மிருகம் பாவ ஜீவன்களை சூழ்ந்து ,முட்டி மோதி இரத்தக்களரியாய் துன்புறுத்தும்.
கும்பிபாகம் :
தான் சுவையாக உண்ண வேண்டும் என்று வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைபடுத்தும் பாவிகள் அடையும் நரகம். இங்கு எரியும் நெருப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்கொப்பரையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளை துன்புறுத்துவர்..
Tamil online news Today News in Tamil
English Summary
Asper Garuda Puranam Punishment