பூனைக் குறுக்கே வந்தால் நல்லதா? கெட்டதா?
cat crossing on your way good or bad
பொதுவாக வீட்டிலிருந்து யாராவது வெளியில் கிளம்பினால் வீட்டில் இருப்பவர்கள் எதிரில் யாராவது வருகிறார்களா? என்று வாசலை பார்க்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். அப்படி செல்லும் போது தெருவில் பூனைக் குறுக்கே வந்தால் அதை அபசகுனம் என்று சொல்கின்றனர்.
உடனே வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மீண்டும் செல்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது எந்தவிதமான தீங்கையும் விளைவிப்பதில்லை. இதனால் சில நன்மைகளும் உண்டாகிறது.
அதாவது பூனை ஒரு வீட்டிற்குள் குட்டி போட்டால், அது நல்லது வீட்டில் செல்வம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. மேலும், ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் பார்வையும் நிலையும் நன்றாக இருக்கவில்லை என்றால், அவர் வீட்டில் பூனையை வளர்ப்பது ஒரு நல்ல பரிகாரம்.
காலசர்ப தோஷம் கண் திருஷ்டி, பில்லி சுனியம் உள்ளிட்டவை நீங்க வீட்டில் பூனை முடியை சிவப்பு துணியில் கட்டி உடன் வைத்திருக்க வேண்டும். பூனைகள் வீட்டிற்குள் நுழைந்து பாலை குடிப்பது, உங்கள் பண வருவாய்க்கான அறிகுறியாகும்.
English Summary
cat crossing on your way good or bad