மகர ராசியினரின் வாழ்க்கை துணையார் எப்படி இருப்பர் தெரியுமா? - Seithipunal
Seithipunal


12 ராசிகளில் 10 வது ராசி மகரம். ராசியின் அதிபதி சனி பகவான். மகரம் என்பது கடல் வீடை குறிக்கிறது. கடலில் அலைகள் போல உங்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். நீங்கள் சீக்கிரம் சோர்வு அடையமாட்டீர்கள். வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்க கூடியவர்கள். 

உங்கள் ராசியின் 02-ஆம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கும் சனி அதிபதி.  அதிக அளவில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும், திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்காகப் பணத்தைத் தேடுவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும் உங்களுக்கு. 

07-ஆம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன். உங்களுடைய வாழ்க்கைத் துணை கலாரசனை மிக்கவராக இருப்பார். உங்களை விடவும் நிதானமாக யோசித்துச் செயல்படுபவராக இருப்பார். அத்துடன், உங்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிக்க கூடியவர்.அதேநேரம் வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பார். 

ராசியின் 10-ஆம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன். வாழ்க்கையின் மத்தியப் பகுதியில் சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். கன்ஸ்ட்ரக்‌ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். எங்கே உங்களுக்கு பணமும் புகழும் சேர்ந்து கிடைக்குமோ அங்கே தான் வேலை செய்யவே விரும்புவீர்கள். உயர்ந்த பதவி யோகம் உங்களுக்கு உண்டு. 

மகர ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக கலைத் துறையினருடன் எப்போதும் தொடர்பு கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்துக்கு அதிபதி குரு. உங்களின் செலவுகள் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இருப்பது உங்களுக்கு நன்மை தருவதாக அமையும்.

அதாவது மகரம் ராசியினர் சனியின் பூரண ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் உங்களுக்குத் திருமாலிடம் மாறாத பக்தி இருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி இருந்தாலும், பெருமாளை வழிபடுவதையே மிகவும் விரும்புவீர்கள் நீங்கள். 

கடல் என்பது சனி பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. மகரத்தை மகரக் கடல் என்றே அழைப்பார்கள். இதனால் பாற்கடலில்தான் மகாவிஷ்ணு சயனக் கோலம் கொண்டிருக்கிறார். எனவே, சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதப் பெருமாளாக அருள் புரியும் கோயில்கள் அனைத்தும் நீங்கள் வழிபட உகந்தவை. குறிப்பாக, திருக்கடல்மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உங்களுக்கு உண்டாகும்.

மகர ராசியில் உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Common characteristics of Capricorn


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->