பவுர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையே சிவனாக வழிபடுவதால் இந்த மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

அந்த வகையில், ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். 

பவுர்ணமி மாலையில் தொடங்கியதால் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று வரிசையில் நின்றனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

மேலும், பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதாவது, கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உட்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees croud increase in thiruvannamalai temple for pournami girivalam


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->